பண்டிகையில் ரிலீசாகும் பெரிய நடிகர்கள் படங்கள்


world-news NEWS

பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில் அடுத்து வர உள்ள பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்கள் படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. விஷால், ஆர்யா நடிக்கும் எனிமி படம் அடுத்த மாதம் ஆயுத பூஜையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிவா இயக்கி உள்ளார்.

இதுபோல் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தையும் தீபாவளி பண்டிகையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர். வலிமை படப்பிடிப்பும் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் முடிக்க உள்ளனர். இந்த படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள்...

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின்...

நடிகர் சிலம்பரசனின் மாநாடு திரைப்படம் நவம்பர் 4...

‘சத்ரியன்’ திரைப்படத்தை தனது சிகிச்சைக்கு...

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக...

நடிகர் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ படம்...