இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா


world-news NEWS

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 18.1 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது.

உள்ளூரில், இலங்கை அணி முதலில் பேட் செய்து எடுத்த மோசமான ஸ்கோர் இதுவாகும். தென்ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷம்சி, மார்க்ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 58 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின்...

20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி...

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக...