‘வாட்ஸ் அப்’ குரூப் மூலம் தகவல் அனுப்பி குதிரை பந்தயம் நடத்த முயன்ற 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு


world-news NEWS

‘வாட்ஸ் அப்’ குரூப் மூலம் தகவல் அனுப்பி குதிரை பந்தயம் நடத்த முயன்ற 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை அருகே நேற்று அதிகாலை குதிரை பந்தயம் நடைபெற இருப்பதாக இருந்தது. ஆனால் அங்கு போலீசார் கெடுபிடி காரணமாக குதிரைப்பந்தயம் தடைபட்டது.

இதனால் குதிரைப்பந்தயத்தை நடத்த இருந்தவர்கள், தங்களது ‘வாட்ஸ்அப்’ குரூப்பில் வல்லக்கோட்டை அருகே நடக்க இருந்த குதிரை பந்தயம் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக ஆவடி அடுத்த வெள்ளானூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் கொள்ளுமேடு பகுதியில் குதிரை பந்தயம் நடைபெறும் என அழைப்பு விடுத்தனர்.

குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக சேலையூர், தாம்பரம், பம்மல், ராயப்பேட்டை, மணலி, அம்பத்தூர், வெள்ளானூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து சுமார் 14 குதிரைகள் மற்றும் வண்டிகளை மினி வேன்களில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு 1 மணியளவில் வெள்ளானூர் அருகே வந்து சேர்ந்தனர். குதிரை பந்தயத்தை கண்டுகளிக்க பொதுமக்களும் அங்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.


50 பேர் மீது வழக்கு

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் நள்ளிரவில் அங்கு அதிரடியாக சென்றனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு நடக்கவிருந்த குதிரை பந்தயத்தை நள்ளிரவு 1.30 மணிக்கே தடுத்து நிறுத்திய போலீசார், பந்தயத்தில் பங்கேற்க இருந்த 14 குதிரைகள், குதிரைகளை ஏற்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து வைத்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி குதிரை பந்தயத்தை நடத்த முயன்றதாக 14 பேர் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்...

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நிதீமன்ற...

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18...

‘வாட்ஸ் அப்’ குரூப் மூலம் தகவல் அனுப்பி குதிரை...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த...

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து...

எழும்பூர் ரெயில் நிலையத்தில் வெளியூர்...